உடும்பு :
உடும்புகள் பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களைச் சேர்ந்ததாகும். எனினும் 20(cm) சென்ரிமீற்றர் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த அவயவங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளன. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புலால் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா, வரானசு மபிடாங் மற்றும் வரானசு ஒலிவாசியசு ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது. இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன. உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு ஆகும்.