ஒட்டகம் :
ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன.
மேலும் இதன் சிறப்பு பற்றிப் பார்ப்போம்.
• ஒட்டகத்தை பாலைவனத்தில் வாழத் தகுதி வாய்ந்த ஒரே உயிரினம் என்று கூடச் சொல்லலாம்.
• ஒட்டகத்தின் ஜீரண அமைப்பு, தோல்ப் பகுதி, கால்கள் என எல்லாமே பாலைவனத்தில் வாழும் தகுதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டகத்திற்கு மற்றைய உயிரினங்களுக்கு இல்லாத பல ஆற்றல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
•ஒட்டகம் 15 மணி நேரம் தொடர்ந்து நடக்கும் ஆற்றல் பெற்றது.
•ஒட்டகம் ஒரு நாளில் சுமார் 40 லீட்டர் பால் தரும்.
•அதிகபட்சமாக ஒரு ஒட்டகம் 540 கிலோ எடை வரை இருக்கும்.
•ஒட்டகத்தின் சராசரி ஆயுட்காலம் 86 ஆண்டுகள் ஆகும்.
•ஒட்டகம் பிறந்து 24 மணி நேரத்தில் எழுந்து நடக்கத் தொடங்கிவிடும்.
•ஒட்டகத்தின் பிறந்த குட்டி மூன்றரை அடி உயரம் இருக்கும்.