மேற்குத் தொடர்ச்சி மலை 1500 கி.மீ. நீளத்தில் மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள மலைப் பகுதியாகும். இம்மலைப் பகுதி இந்தியாவில் 5 சதவிகித நிலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. இங்கு 490 மர வகைகள் உள்ளது. இதில் 308 மர வகைகள் இம்மலைப் பகுதியில் மட்டுமே காணக் கூடியதாகவுள்ளது. இங்கு 75 பேரினத்தை சார்ந்த 245 ஓக்கிட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் 10 பேரினத்தில் உள்ள 112 சிற்றினங்களும், 1500 இருவித்திலைத் தாவரங்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே காணக்கூடியவையாகும்.
மேலும் 22 பேரினத்தை சார்ந்த 315 சிற்றினங்கள் அதாவது 12 வகையான பாலூட்டிகள், 13 வகையான பறவைகள், 89 வகையான ஊர்வன, 87 வகையான இருவாழ்விகள் மற்றும் 104 வகையான மீன்கள் இம்மலைப் பகுதிக்கே உரித்தானவையாகும். இம்மலைப் பகுதியிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவிற்குள்ளாகி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 235 சிற்றின பூக்கும் தாவரங்கள் அழியும் நிலையில் உள்ளன. மேலும் சிங்கவால் குரங்கு, நீலகிரி லங்கூர், நீலகிரி வரையாடு, பறக்கும் அணில் மற்றும் மலபார் க்ரே ஹான்ஃபில் போன்றவை இப்பகுதியில் உள்ள அரிய விலங்கினங்களாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலை 1500 கி.மீ. நீளத்தில் மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள மலைப் பகுதியாகும். இம்மலைப் பகுதி இந்தியாவில் 5 சதவிகித நிலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. இங்கு 490 மர வகைகள் உள்ளது. இதில் 308 மர வகைகள் இம்மலைப் பகுதியில் மட்டுமே காணக் கூடியதாகவுள்ளது. இங்கு 75 பேரினத்தை சார்ந்த 245 ஓக்கிட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் 10 பேரினத்தில் உள்ள 112 சிற்றினங்களும், 1500 இருவித்திலைத் தாவரங்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே காணக் கூடியவையாகும்.