கோலிக்குண்டு விளையாட்டு :
கோலிக்குண்டு நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்றாகும். இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவர். குழி போட்டும், கோடு போட்டும் இருவேறு வகைகளில் அரங்கு அமைக்கப்படும். குழி குதிகாலால் திருகிக் குண்டு தங்கும் ஆழத்திற்கு அமைக்கப்படும்.
உருண்டையான கூழாங்கற்களையும், செங்கல்லையும் உடைத்து, உரைத்துச் செய்த கூழாங்கற்களையும் கோலிக்குண்டாகப் பயன்படுத்துவர். வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் விற்பனைக்கு வந்த பிறகு அதனையும் பயன்படுத்தலாயினர்.
கட்டை-விரலை நிலத்தில் ஊன்றி, நடுவிரல் விசையால், மற்றொரு கை பிடித்திருக்கும் கோலிக்குண்டை அடிப்பர்.