அழகுத் தெய்வம் முருகனிற்கு எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ள போதிலும் இவற்றுள் நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் விளங்கியது. யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ள கோயில் நல்லைக்குமரன் ஆலயமாகும். இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது. இக்கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்.
அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ம் ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன், முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றது.
ஆண்டுதோறும், கந்தபுராண படன வாசிப்பு நடைபெற்று வருவதுடன், திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டிய நடனங்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் என்பன நடைபெற்றுவருவதுடன், பஜனை படிக்கும் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அழகுத் தெய்வம் முருகனிற்கு எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ள போதிலும் இவற்றுள் நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் விளங்கியது. யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ள கோயில் நல்லைக்குமரன் ஆலயமாகும். இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது. இக்கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்.
அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ம் ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன், முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றது.
ஆண்டுதோறும், கந்தபுராண படன வாசிப்பு நடைபெற்று வருவதுடன், திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டிய நடனங்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் என்பன நடை பெற்றுவருவதுடன், பஜனை படிக்கும் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.