“தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம் மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
--சுவாமி விவேகானந்தர்
எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறு யாரையோ!
சீர்திருத்த முயலுகிறார்கள்
--தாகூர்
நீ வாயைத் திறக்கும் போது உள்ளத்தைத் திறக்கின்றாய் எனவே கவனமாக இரு!
--யங்
“இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள் தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
--நபிகள் நாயகம்
“புத்தகங்களை யாருக்கும் இரவலாய் கொடுக்காதீர்கள்.
அது உங்களுக்குத் திரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
--அனடோல் பிரான்ஸ் நாவலாசிரியர்
ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல!
--சிலான்
துன்பமும், வேதனையும் என உலகம்
ஆனாலும்…
பூக்கள் மலரும்.
--ஜஸா
ஆணுக்குத் தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்குத் தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்குத் தூக்கம் எட்டு மணிநேரம்.
--நெப்போலியன்
ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை
செலவு செய்யாதே.எவ்வளவு சொல்லியும்
பயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும்
விரயமாக்காதே..
-- கன்யூசியஸ்
அநேகப் பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள்.ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
--கலில் ஜிப்ரான்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
--ஆலன் ஸ்டிரைக்
மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான்
பிறக்கின்றன.
--நபிகள் நாயகம்
உனக்கு மிக நன்றாகத் தெரிந்த விடயத்தை அது பற்றி சிறிதும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதைக் கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.
--நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
சில சமயம் முட்டாளாய்
காட்சியளிப்பது
அறிவுள்ள செயல்.
-- தாமஸ் ஆல்வா எடிசன்
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.
-- வோல்டன்
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற் கண் புரிந்து கொள்வது அவசியம்.
--அன்னை தெரசா
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
--சுவாமி விவேகானந்தர்
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.
-- மான்ஸ்பீல்டு
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் தொடங்கினால் அவன் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
--அன்னை தெரசா அவர்கள்
எல்லோருமே உலகத்தை மாற்றவேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களே ! தவிர ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை.
--லியோ டோல்ஸ்டோய்
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
-- கன்யூசியஸ்
குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் தான் தங்கியிருக்கின்றது.
--நெப்போலியன்
அழகு என்பது சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி அதற்கு நீ அடிமையாகாதே.
--வால்டேர்
ஆசையில் உள்ளவன் கையில் அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டிருக்கும்.
--எபிக் டெட்டஸ்
நான் எடுக்கும் முடிவு சரியா? என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.
--மாவீரன் அலெக்சாண்டர்
தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
--லெனின்