மழலைத் தமிழில் நீ பேசு:
சின்னப் பாப்பா நீ பேசு
சிரித்துச் சிரித்து நீ பேசு
கன்னித் தமிழில் நீ பேசு
கட்டிக் கரும்பே நீ பேசு
அன்பின் வடிவே நீ பேசு
அழகுத் தமிழில் நீ பேசு
வண்ண மயிலே நீ பேசு
வாழும் தமிழில் நீ பேசு
இன்பக் கனியே நீ பேசு
இதயம் மகிழ நீ பேசு
மழலை மொழியில் நீ பேசு
மனது குளிர நீ பேசு